தமன்னா ஆணாக மட்டும் இருந்திருந்தால் நானே திருமணம் செய்திருப்பேன்….!!!

  • பிரபல நடிகரான கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன்.
  • தமன்னாவின் நட்பை யாரும் இழக்க விரும்ப மாட்டார்கள்.

பிரபல நடிகரான கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். இவரும், நடிகை தமன்னாவும் நெருங்கிய தோழிகள். இவர்கள் இருவரும் பார்ட்டி, மற்றும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, தங்களது உறவுகளை வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் பேசிய ஸ்ருதிஹாசன், ‘தமன்னாவின் நட்பை யாரும் இழக்க விரும்ப மாட்டார்கள் என்றும், அவர் ஒரு நல்ல பெண் என்றும், அவர் மட்டும் ஆணாக இருந்திருந்தால் அவருடன் டேட்டிங் சென்றிருப்பேன், ஏன் அவரை திருமணம் கூட செய்திருப்பேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் நடிகை ஸ்ருதிஹாசன், லண்டனை சேர்ந்த நடிகர் மைக்லேல் கார்சல் என்பவரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.