ரஜினி கட்சி ஆரம்பித்தால் தமிழகத்திற்கு எந்த நன்மையும் கிடையாது - கே.எஸ்.அழகிரி

ரஜினி கட்சி ஆரம்பித்தால் தமிழகத்திற்கு எந்த நன்மையும் கிடையாது என்று  தமிழக

By venu | Published: Oct 23, 2019 09:53 AM

ரஜினி கட்சி ஆரம்பித்தால் தமிழகத்திற்கு எந்த நன்மையும் கிடையாது என்று  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பா.ஜ.கவில் இணைய வேண்டும்  என்பது என் விருப்பம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்தநிலையில் இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில்,  ரஜினி கட்சி ஆரம்பித்தாலோ அல்லது பாஜகவில் சேர்ந்தாலோ தமிழகத்திற்கு எந்த நன்மையும் கிடையாது . ரஜினி கட்சி தொடங்கமாட்டார், பாஜகவிலும் சேர மாட்டார். ஆன்மீகத்தில் நாட்டம் உடையவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
Step2: Place in ads Display sections

unicc