ஜெய் ஷா அமித் ஷாவின் மகனாக இருந்தால் என்ன-சவுரவ் கங்குலி..!

  • இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டார்.இதனால் பல விமர்சனங்கள் எழுந்தது.
  • இதனால் அவர் தந்தை தான் அரசியல்வாதி. ஜெய் ஷா அரசியல்வாதி அல்ல என கங்குலி கூறினார்

கடந்த அக்டோபர் மாதம் இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி  ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டார்.இதனால் பல விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் கங்குலி இது குறித்து கூறுகையில் ,ஒரு பிரபலத்தின் மகன் அல்லது மகளாகவோ இருந்தால் எதிலும் ஈடுபடக் கூடாது என சிலர் எண்ணுகின்றனர். முன்னாள் வீரர் சச்சின் மகன் அர்ஜுன் இனி விளையாட தடை விதிக்கலாமா?சச்சின் மகன் என்று பார்க்கக்கூடாது அவரின் திறமையை மட்டுமே எடை போடவேண்டும்.

ஆஸ்திரேலிய அணியில் மார்க் வாஹ், ஸ்டீவ் வாஹ் ஆகிய இரு சகோதரர்களும் பல போட்டிகளில் விளையாடினர்.நல்லவேளையாக எனக்கு மகன் இல்லை. ராகுல் டிராவிடின் மகன்கள் கர்நாடக கிரிக்கெட் லீக்குகளில் சதங்கள் அடித்தனர்.திறமை இருந்தால் அவர்கள் இந்தியா அணியில் இடம் பிடிப்பார்கள்.

இதே தான் ஜெய் ஷா . கடந்த 6-7 வருடங்களாக குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகங்களில் ஒருவராக இருந்து உள்ளார். அமித் ஷாவின் மகனாக இருந்தால் என்ன.? அவர் தந்தை தான் அரசியல்வாதி. ஜெய் ஷா அரசியல்வாதி அல்ல.ஜெய் ஷாவைத் தனிப்பட்ட முறையில் மதிப்பிட வேண்டும் என கங்குலி கூறினார்.

author avatar
murugan