என்மீது புகார் அளித்தால் செத்து விடுவேன்! காவல் நிலையம் முன்பு கையை அறுத்துக் கொண்ட கணவர்!

சென்னை, பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், காமராஜபுரத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா.

By leena | Published: Nov 14, 2019 03:05 PM

சென்னை, பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், காமராஜபுரத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவரது கணவர் ஆரோக்கியராஜ். இவர்கள் இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், ஐஸ்வர்யாவை அவரது, கணவர் ஆரோக்கியராஜ் குடித்துவிட்டு வந்து, அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இதனையடுத்து, ஐஸ்வர்யா காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். ஐஸ்வர்யாவை பின் தொடர்ந்து வந்த கணவர், புகையால் அளித்தால் நான் செத்து விடுவேன் என்று கூறி, தனது கையில் வைத்திருந்த பிளேடால் நான்கு இடங்களில் கையை வெட்டியுள்ளார். இதனையடுத்து, விரைந்து வந்த போலீசார், அவரிடம் இருந்த பிளேடை பறிமுதல் செய்து, அவரை குரோம்பேட்டை அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Step2: Place in ads Display sections

unicc