2014க்கு முன் கொரோனா வந்திருந்தால்.? கற்பனை செய்து பாருங்கள் – பிரதமர் மோடி

முறையான கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையில் 2014க்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால்.? பிரதமர் மோடி கற்பனை.

தூய்மை இந்தியா திட்டத்தின் ஓர் அங்கமாக “ராஷ்ட்ரிய ஸவ்ச்சதா கேந்திரா” என்ற தேசிய தூய்மை மையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் திறந்து வைத்துள்ளார்.

திறந்து வைத்த பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாளில், அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம். கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கொரோனாக்கு எதிராகப் போராட இந்தியாவுக்கு ஸ்வச்சக்ரா அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது . மேலும், 2014-க்கு முன்னர் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டிருந்தால் திறந்த வெளியில் மலம் கழிக்கும் அவலநிலை நாட்டில் ஏற்பட்டிருக்கும்.

இந்நிலையில் 2014- க்கு முன்னர் 60% க்கும் அதிகமான மக்கள் மலம் கழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது கொரோனா வந்திருந்தால்? என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஊரடங்கு அமல் படுத்தப்பட்டால்? எப்படி இருந்திருக்கும் என்று கூறினார்.

அந்த வகையில், இந்த அடிப்படை வசதி 2014 ஆம் ஆண்டுக்கு முன் கிடையாது என்று தெரிவித்த அவர் கடந்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு ‘ஸ்வச் பாரத் மிஷன்’ அவர்களின் வாழ்க்கையின் இலக்காக மாற்றியது. 60 மாதங்களுக்கும் மேலாக 60 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதியை நாங்கள் 60 மாதங்களில் வழங்க முடிந்தது என்றார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.