இந்து அல்லாத ஒருவர் உணவு கொண்டு வந்தால் உணவை கேன்சல் செய்த வாடிக்கையாளர் - சோமாட்டோ பதிலடி!

ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனக்களில் தற்போது முன்னிலையில் சோமாட்டோ

By murugan | Published: Jul 31, 2019 04:39 PM

ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனக்களில் தற்போது முன்னிலையில் சோமாட்டோ நிறுவனம் உள்ளது.இன்றைய பரப்பான உலகில் அனைவரும் தங்களுக்கு பிடித்த உணவுகளை வீட்டில் செய்து சாப்பிடுவதை விட ஆன்லைனில்  உணவு டெலிவரி செய்யும் நிறுவனக்களில் ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கம் அதிகரித்து உள்ளது . இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சார்ந்த ஒருவர்  ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும்  நிறுவனனமான சோமாட்டோவில் உணவு ஆர்டர் செய்து உள்ளார்.உணவு டெலிவரி செய்பவர் இந்து அல்லாத ஒருவர் என்பதால் அந்த உணவை கேன்சல் செய்து உள்ளார்.   அதற்கான காரணத்தை தனது ட்விட்டரில் கூறிய அவர் " இந்து அல்லாத ஒருவர் உணவு கொடுத்ததால் அந்த உணவை கேன்சல் செய்து விட்டேன்.நான் உணவு கொடுப்பவரை மாற்ற கோரினேன்.ஆனால் அவர்கள் அவரை மாற்ற வில்லை.மேலும் எனது பணத்தையும் திருப்பி தரவில்லை. உணவுவை வாங்கும் படி என்னை கட்டாயப்படுத்த கூடாது.எனக்கு என் பணம் திரும்ப வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். Image result for zomato cancel food இதற்கு பதில் அளித்த சோமாட்டோ நிறுவனம் "உணவுக்கு மதம் கிடையாது.உணவே ஒரு மதம் தான்" என கூறியுள்ளது. சோமாட்டோ நிறுவனத்தின் இந்த பதிலுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc