ஜியோவையே மிஞ்சும் ஐடியாவின் அசத்தல் ஆஃபர்..!

Amazing Offer Of Idea To Survive Geo ..!

  ஐடியா செல்லுலார், ஜியோவிற்கு எதிரான அதன் ரூ.998/- என்கிற புதிய ப்ரீபெய்டு அன்லிமிடெட் திட்டமொன்றை அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள ஐடியா செல்லுலார் ரூ.998/- ப்ரீபெய்ட் பேக் ஆனது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.799/- உடன் நேரடியாக போட்டியிடுவது மட்டுமின்றி அதே விலையில் கிடைக்கும் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.799/- உடனும் போட்டியிடுகிறது.இது மட்டும் அல்லாமல் மற்ற நிறுவனங்களுடனும் போட்டி போடுகிறது. அறிவிக்கப்பட்டுள்ள ரூ.998/- ஆனது நாள் ஒன்றிற்கு 5ஜிபி அளவிலான 4ஜி/2ஜி டேட்டாவை வழங்குகிறது.உடன் வரம்பற்ற கால்ஸ் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்குகிது. மொத்தம் 35 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, ஐடியா பயன்பாடு மற்றும் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தின் வழியாக ரீசார்ஜ் செய்ய கிடைக்குமென்பதும், உடன் இந்த ரூ.998/- ஆனது நிறுவனத்தின் மேஜிக் ஆபர் ரூ.3,300/- கேஷ்பேக் வாய்ப்பின் கீழும் அணுக கிடைக்கமென்பதும் குறிப்பிடத்தக்கது. ஐடியாவின் ரூ.998/- பேக் உடன் சேர்த்து நாள் ஒன்றிற்கு 7 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் ரூ.1,298/- திட்டமும் அறிமுகமாகியுள்ளதாக டெலிகாம்டால்க்.இன்ஃபோ மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 35 நாட்களுக்கு செல்லுப்படியாகும் இந்த ரூ.1,298/- பேக் ஆனது வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது ஐடியா ரூ.199/-ன் நன்மைகளை பொறுத்தமட்டில், இது நாள் ஒன்றுக்கு 1.4 ஜிபி தரவு, 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 தினங்களுக்கும் தினசரி மற்றும் வாராந்திர வரம்பு கொண்ட குரல் நன்மைகள் ஆகியவற்றை வழங்குகிறது. உடன் ரூ.309, ரூ.357, ரூ.399, ரூ.448 மற்றும் ரூ.509/- போன்ற சிறந்த திட்டங்களும் அணுக கிடைக்கிறது.