ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப் படுகொலை விவகாரம்.. சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு… செவி மடுக்குமா மியான்மர் அரசு..

  • ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட விவகாரம்.
  • மியான்மர் அரசிற்க்கு சர்வதேச நீதிமன்றம் புதிய உத்தரவு.

உலக நாடுகளுக்கு இடையிலான பிரட்சனைகளை தீர்ப்பதில்  தி ஹோக் நகரில் உள்ள பன்னாட்டு நீதிமன்றம் ஐநாவால் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இந்நிலையில்  நம் அண்டை நாடான மியான்மரைப் பூர்வீகமாகக் கொண்ட ரோஹிங்யா முஸ்லிம்கள், மியான்மரின் ரகைன் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இவர்கள் அந்த நாட்டு ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்படுவதாக சர்வதேச அளவில் புகார்கள் எழுந்தது.

Image result for rohingya muslims killed in myanmar

இதனை தடுத்திட கோரி சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் , 2019-ம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.சர்வதேச  நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான 17 நீதிபதிகள் நேற்று அளித்த தீர்ப்பு, ரோஹிங்யாக்களை மியான்மர் அரசு இனப்படுக்கொலை செய்யக்கூடாது என்றும், அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு  தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Image result for rohingya muslims killed in myanmar case in icj

மேலும்,  இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களை மியான்மர் பாதுகாக்க வேண்டும் என்றும், அத்துடன் ரோஹிங்கியாக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பன்னாட்டு நீதிமன்றத்திற்க்கு   அறிக்கைகளை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சர்வதேச கோர்ட் உத்தரவை ஐ.நா. மனித உரிமை அமைப்பின் நிபுணர்கள் வரவேற்றுள்ளனர். மியான்மரில் ராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு ரோஹிங்யா விவகாரத்தால் பறிக்கப்பட்டது என்பது நினைவு கூறத்தக்கது.

author avatar
Kaliraj