ரயில் பெட்டி தயாரிப்பில் புதிய சாதனை படைத்தது ஐ.சி.எப். தொழிற்சாலை.!

ரயில் பெட்டி தயாரிப்பில் புதிய சாதனை படைத்தது ஐ.சி.எப். தொழிற்சாலை.!

  • ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் 2018 – 2019-ம் நிதியாண்டில், ஐ.சி.எப். 215 நாட்களில் 3,250 பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்ததாக கூறியுள்ளார்.
  • கடந்த நிதியாண்டில், இதே எண்ணிக்கையில் பெட்டிகள் தயாரிக்க, 289 நாட்கள் ஆனது.

சென்னை, பெரம்பூரில் உள்ள, ஐ.சி.எப். தொழிற்சாலை 215 நாட்களில் 3,000 ரயில் பெட்டிகளை தயாரித்து, புதிய சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் தமது டுவிட்டர் பக்கத்தில், கடந்த  2018 – 2019-ம் நிதியாண்டில் ஐ.சி.எப். 3,250 பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்ததாக கூறியுள்ளார்.

இந்நிலையில், நடப்பு ஆண்டில் 4,000 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தயாரிப்பு பணி நடந்து வருவதாகவும், இதில் 215 நாட்களில், 3,000 பெட்டிகள் தயாரித்து, முந்தைய சாதனையை முறியடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த நிதியாண்டில், இதே எண்ணிக்கையில் பெட்டிகள் தயாரிக்க, 289 நாட்கள் ஆனதாக அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube