சர்ச்சையை ஏற்படுத்திய பவுண்டரி முறை வெற்றியை நீக்கிய ஐசிசி..!

இந்த வருடம் ஜூலை 14-ம் தேதி 12-வது உலக கோப்பை தொடர் முடிந்தது. இந்த தொடரில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியும் , நியூசிலாந்து அணியும் மோதியது. இப்போட்டி முதலில் இறங்கி நியூசிலாந்து அணி 241 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 242 இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் இறங்கிய இங்கிலாந்து 241 ரன்கள் எடுத்தது.இதனால் போட்டி டிராவில் முடிந்தது. இதை தொடர்ந்து பின்னர் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 15 ரன்கள் எடுத்தன. பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணியும்  15 ரன்கள் எடுத்தால் சூப்பர் ஓவர் போட்டியும் டிராவில் முடிந்தது.
இறுதியாக  போட்டியில் அதிக பவுண்டரி அடித்த  இங்கிலாந்து அணிக்கு  கோப்பை கொடுக்கப்பட்டது.ஐசிசி-யின் இந்த முடிவிற்கு பல கிரிக்கெட் வீரர்கள் விமர்சனம் தெரிவித்தன.
இந்நிலையில் ஐசிசி அறிவிப்பு ஒன்றை அறிவித்து உள்ளது. அதன்படி ஒரு போட்டி டிராவில் முடிந்தால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஒரு நடத்தப்படும். சூப்பர் போட்டியும் டிராவில் முடிந்தால் மீண்டும் சூப்பர் ஒரு முறை பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. இது ஐசிசி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அமல்படுத்தப்படும் என அறிவித்தது.

author avatar
murugan