மெர்சல் தளபதிக்கு கிடைத்த மற்றுமொரு மணிமகுடம்

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் அட்லி இயக்கத்தில் கடந்த தீபாவளியன்று வெளியாகி மெகா ஹிட் ஆன திரைப்படம் மெர்சல். இப்படம் சுமார் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்தது. இப்படத்தை தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்திற்க்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

இப்படத்திற்கு பல விருதுகளும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் லண்டனை சேர்ந்த ஐரா (IARA) என்ற விருது வழங்கும் நிறுவனம் தற்போது நடிகர் விஜய்க்கு சிறந்த சர்வதேச நடிகருக்கான வருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment