எளிய மக்களுக்காக எனது வீட்டை மருத்துவமனையாக்க விரும்புகிறேன் - உலகநாயகன் கமலஹாசன்

நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில்

By Fahad | Published: Apr 02 2020 01:35 PM

நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாது தற்போது, தமிழகத்தில் இதன் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதனை தடுப்பதற்காக இந்திய அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதுடன், ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளது. 

இந்நிலையில், நடிகர் கமலஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில், 'இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி,மக்களுக்கு உதவ நினைக்கிறேன்.அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன்.
உங்கள் நான்.' என பதிவிட்டுள்ளார்.