15 நாட்களுக்குள் தெலுங்கு மொழியை கற்று விடுவேன்-தெலுங்கானா ஆளுநர் தமிழிசை உறுதி

15 நாட்களுக்குள் தெலுங்கு மொழியை கற்று விடுவேன் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை

By Fahad | Published: Apr 01 2020 02:26 AM

15 நாட்களுக்குள் தெலுங்கு மொழியை கற்று விடுவேன் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து கடந்த ஞாயிறன்று ஆளுநராக பதவி ஏற்றார்.பதவி ஏற்ற அதே நாளில்  6 புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் உள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இடையே பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,15 நாட்களுக்குள் தெலுங்கு மொழியை கற்று ,மாநில மக்களுடன் சரளமாக பேச உள்ளதாக தெரிவித்தார்.ஆளுநர் மாளிகையில் உள்ளவர்கள் தினமும் யோகா செய்து உடல் நலத்தை காக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

More News From the Governor of Telangana