காஷ்மீர் விவகாரத்தில் தேவைப்பட்டால் நானே ஸ்ரீநகருக்கு நேரில் செல்வேன்-தலைமை நீதிபதி அதிரடி

காஷ்மீர் விவகாரத்தில் தேவைப்பட்டால் நானே ஸ்ரீநகருக்கு

By venu | Published: Sep 16, 2019 02:24 PM

காஷ்மீர் விவகாரத்தில் தேவைப்பட்டால் நானே ஸ்ரீநகருக்கு நேரில் செல்வேன் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதை அடுத்து குழந்தைகளை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருப்பதாகக்  குழந்தைகள் நல ஆர்வலர்  எனக்சி கங்குலி ( Enakshi Ganguly) மற்றும் பேராசிரியர்  ஷண்டா சின்கா ( Shanta Sinha) உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை  தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றத்தை அணுக முடியாத சூழல் இருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிமன்றத்தை மக்கள் அணுக முடியாவிட்டால் அது மோசமான விஷயம் ஆகும் .இந்த விவகாரத்தில் தேவைப்பட்டால் நானே ஸ்ரீநகருக்கு நேரில் செல்வேன். மேலும்  ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இது தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc