வி.ஜேவாக இருந்தேன், தற்போது இவரால் ஹீரோவாக இருக்கிறேன் - ரியோ ராஜ்

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன்

By balakaliyamoorthy | Published: Mar 01, 2020 02:24 PM

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தன்னை போன்றவர்களை ஊக்குவித்து வருகிறார். அந்த வகையில் நிகழ்ச்சி தொகுப்பாளரான ரியோ ராஜை நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படம் மூலம் பெரிய திரையில் ஹீரோவாக்கிப் பார்த்தார். இதையடுத்து ரியோ, பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். இதனிடையே இப்படத்தில் இருந்து என்னோடு வா பாடல் வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள அந்த பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில், ரியோ ராஜ் 2 புகைப்படங்களை ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 5 ஆண்டுகளுக்கு முன்பு சிவகார்த்திகேயனின் காக்கிச் சட்டை பட ப்ரொமோஷனில் விஜேவாக இருந்தேன். தற்போது சிவகார்த்திகேயனால் ஹீரோவாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இப்புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc