எனக்கு கூடத்தான் முதல்வராக ஆசை இருக்கு -அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

நிகழ்ச்சி ஒன்றில்  பாஜக மாநிலத் துணைத் தலைவர் பி.டி அரசகுமார் பேசுகையில், 

By venu | Published: Dec 02, 2019 09:59 PM

நிகழ்ச்சி ஒன்றில்  பாஜக மாநிலத் துணைத் தலைவர் பி.டி அரசகுமார் பேசுகையில்,  எம்ஜிஆருக்கு அடுத்து நான் ரசிக்கும் தலைவர் மு க ஸ்டாலின். அவர் நினைத்திருந்தால் கூவத்தூர் சம்பவத்தின்போது முதலமைச்சராக ஆகி இருக்கலாம் ஆனால் ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்தார்.கண்டிப்பாக  ஸ்டாலின் முதலமைச்சராகும் காலம் வரும் என்று பேசினார். இந்த நிலையில்  கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவரிடம்  பாஜகவின் அரசகுமார் கூறியது குறித்து கேட்டபோது,நான் கூடத்தான் முதல்வராக ஆசைப்படுகிறேன்.ஆனால் அது நடக்கவேண்டுமே என்று பதில் தெரிவித்தார்.மேலும்  உத்தவ் தாக்கரேவுக்கு மாலை அணிவித்த ஸ்டாலின் மதச்சார்பற்ற கட்சி தலைவரா? எனவும் கேள்வி எழுப்பினார் .  
Step2: Place in ads Display sections

unicc