எனக்கு என் கணவர் வேண்டும், விவாகரத்து அல்ல.! வனிதாவின் கணவரின் முதல் மனைவி.!

வனிதாவின் கணவரான பீட்டர் பவுல் என்பவரது முதல் மனைவியான எலிசபெத்

By ragi | Published: Jun 30, 2020 12:21 PM

வனிதாவின் கணவரான பீட்டர் பவுல் என்பவரது முதல் மனைவியான எலிசபெத் தனக்கு கணவர் வேண்டும் என்றும், விவாகரத்து அல்ல என்றும் கூறியுள்ளார்.

இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து செய்து கொண்ட வனிதா விஜயகுமார் கடந்த சனிக்கிழமையன்று நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தனது குழந்தைகளின் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பீட்டர் பவுலின் முதல் மனைவி எலிசபெத் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் தன்னை விவாகரத்து செய்யாமலையே தனது கணவர் திருமணம் செய்து கொண்டதாக கூறி புகார் செய்திருந்தார்.

இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, பீட்டர் பவுல் விவாகரத்து செய்யாமல் யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்றும், அவ்வாறு செய்தால் தன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று எழுதி கொடுத்துள்ளதாக எலிசபெத் கூறியுள்ளார். மேலும் பீட்டர் பவுலுக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. அதனால் அவரை இருமுறை மறுவாழ்வு மையத்தில் சேர்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எனது மகனின் படிப்பிற்காக தான் தனது அம்மா வீட்டில் இருப்பதாக கூறிய எலிசபெத், தனது மகள் அப்பா வேண்டும் என்று கூறுவதாகவும் கூறியுள்ளார். மேலும் சில வருடங்களாக பீட்டர் பவுல் வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் எனக்கு கணவரே வேண்டும், விவாகரத்து அல்ல என்று தெரிவித்துள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc