3 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா டெஸ்ட் எடுக்கிறேன் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

3 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா டெஸ்ட் எடுக்கிறேன்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது.

அந்த வகையில், வல்லரசு நாடான அமெரிக்க உலக அளவில் வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள நிலையில், அதனை தொடர்ந்து பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘ நான் கையில் எப்போதும் மாஸ்க் வைத்திருப்பேன். சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாமல் போகும்போது மட்டுமே பயன்படுத்துவேன். இப்பொது 2,3 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா டெஸ்ட் எடுக்கிறேன்.’ என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.