சீனாவிலிருந்து இந்தியாவுக்கு படையெடுக்கும் ஆப்பிள் நிறுவனம்…

உலகின் சிறந்த மொபைல் போன் நிறுவனமான ஆப்பிள்  ஐபோன்  நிறுவனம், அதின் மொத்த உற்பத்தியான ஐந்து பங்கில்  ஒரு பங்கு உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.  கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு பிறகு சீனாவில் உள்ள அனைத்து பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தை பிற நாடுகளுக்கு இடம்பெயர திட்டமிட்டு வருகின்றன. இந்நிலையில், சீனாவில் பெரிய அளவில் ஐபோன் உற்பத்தி செய்து வரும் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் அவற்றை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:  இந்தியாவில் உள்ள நிறுவனங்களுடன் ஆப்பிள் நிறுவனம் ஏற்கெனவே ஒப்பந்த அடிப்படையில் ஐபோன்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில், சீனாவில் இருந்து பெரிய அளவில் உற்பத்தியை இடம் மாற்ற முடிவு செய்துள்ளது. இது குறித்து தொடர்ந்து பல பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இதேபோல், ஏற்கெனவே இந்தியாவில் உற்பத்தி செய்வது  தொடர்பாக பாக்ஸ்கான், விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள ஆப்பிள் நிறுவனம், அதே நிறுவனங்களுடன் கூடுதல் உற்பத்திக்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 5 ஆண்டுகளில் சுமார் 4,000 கோடி டாலர்  அதாவது சுமார் ₹3,04,000 கோடி ரூபாய்  மதிப்பிலான ஐபோன்களை  இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Kaliraj