ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்ட தம்பதி..!ஏன் தெரியுமா.?

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு  உள்ளவர்களுக்கு அவர்களின் கையில் முத்திரை வைக்கப்பட்டு வருகிறது.அவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டால் மட்டுமே முத்திரை நீக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லி சார்ந்த கணவன்,மனைவி இருவர் பெங்களூரில் இருந்து டெல்லி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் செகந்திராபாத் ஏறினார்கள்.  இந்த ரயிலில் நேற்று காலையில் சென்றபோது அந்த கணவரின் கையில் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டதற்கான முத்திரை இருந்ததே கண்ட  சக பயணி ஒருவர் உடனடியாக மற்ற பயணிகளுடன் இணைந்து டிக்கெட் பரிசோதகரிடம் எடுத்துக் கூறினார்.

உடனே அந்த கணவனும் மனைவியும் ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்கு உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டன. இதை தொடர்ந்து அந்த தம்பதி இருந்து பெட்டி முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு பூட்டப்பட்டது பின்னரே ரயிலில் டெல்லி நோக்கி சென்றது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.