முதலமைச்சருக்கு, ஸ்டாலின் பாராட்டு விழா நடத்துவார் என நம்புகிறேன்-அமைச்சர் ஜெயக்குமார்

முதலமைச்சருக்கு, ஸ்டாலின் பாராட்டு விழா நடத்துவார் என நம்புகிறேன் என்று அமைச்சர்

By Fahad | Published: Apr 02 2020 09:51 AM

முதலமைச்சருக்கு, ஸ்டாலின் பாராட்டு விழா நடத்துவார் என நம்புகிறேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் மீன்பிடி துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வெளிநாட்டு முதலீடுகள் இன்னும் நிறைய வர இருக்கிறது.முதலமைச்சருக்கு, ஸ்டாலின் பாராட்டு விழா நடத்துவார் என நம்புகிறேன். ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து அறிக்கை அளிக்க முடியுமா?என்று தம் மீது குற்றத்தை வைத்துக் கொண்டு அடுத்தவர்களை குற்றம்சாட்டுவதா?  என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.வெளிநாட்டு முதலீடுகள் ஈர்ப்பு என்பதை திறந்த மனதோடு பாராட்ட வேண்டும்.அதிமுக ஆட்சியில் தான் வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் வந்தது என்று தெரிவித்துள்ளார்.

More News From D Jayakumar