காங்கிரசை விட பாஜகவைத்தான் ஆயிரம் மடங்கு தாக்கி பேசியிருக்கிறேன்-வைகோ

காங்கிரசை விட பாஜகவைத்தான்  ஆயிரம் மடங்கு தாக்கி பேசியிருக்கிறேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தொடர்பான விவாதம் மாநிலங்கவையில் நடைபெற்றது.அப்பொழுது மதிமுக எம்.பி.வைகோ பேசுகையில்,காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது  என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக  காங்கிரஸ் தலைவர் அறிக்கை வெளியிட்டார்.அந்த அறிக்கையில், அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்ட ஒரு பச்சோந்தி வைகோ என்று விமர்சித்தார்.

இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் பதில் அளித்தார். அதில், ராஜபக்சே அரசு  தமிழ் இனத்தை சேர்ந்தவர்கள் மீது நடத்திய இனப்படுகொலையின் போது இந்தியாவில் மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சி அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,என்னை யார்  வசைப்பாடினாலும் பரவாயில்லை.மாநிலங்களவையில்  காங்கிரசை விட பாஜகவைத்தான்  ஆயிரம் மடங்கு தாக்கி பேசியிருக்கிறேன்.

பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்று காஷ்மீர் மக்களுக்கு நேரு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.காஷ்மீர் பிரச்சினையில் வாஜிபாய் கனவை நிறைவேற்றிவிட்டதாக மோடி கூறுவது தவறு.காஷ்மீர் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கம் வேண்டும் என்று வாஜ்பாய்  எங்களிடம் கூறியதில்லை என்றும் தெரிவித்தார்.