எனக்கு எச்.ஐ.வி இருக்கு திருமணத்திற்கு முன் கூறிய மாப்பிள்ளை.! அதிர்ந்து போன பெண் வீட்டார்.!

கடந்த ஜூன் மாதம் கிரண் குமாருக்கும், பெங்களூரை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு

By murugan | Published: Dec 14, 2019 08:34 AM

  • கடந்த ஜூன் மாதம் கிரண் குமாருக்கும், பெங்களூரை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு  நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
  • டிசம்பர் 1-ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் கிரண் குமார் பெண் வீட்டிற்கு போன் செய்து தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக கூறினார்.
கர்நாடக மாநிலத்தில்  உள்ள பெங்களூரை சேர்ந்தவர் கிரண் குமார் ( 30) .இவர் அமெரிக்காவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.  கடந்த ஜூன் மாதம் கிரண் குமாருக்கும் பெங்களூரை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு  நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் டிசம்பர் 1-ம் தேதி இருவருக்கும்  திருமணம் நடைபெற இருந்த நிலையில் கிரண் குமார் பெண் வீட்டிற்கு போன் செய்து தனக்கு எய்ட்ஸ் உள்ளது. என்னை உங்கள் பெண் திருமணம் செய்து கொண்டால் அவருக்கும்  எய்ட்ஸ் பாதித்து விடும் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த  மணமகள் குடும்பத்தினர் நீங்கள் பெண் பார்க்க வரும்போதே சொல்லி இருந்தால் திருமண ஏற்பாடும் செய்து இருக்க மாட்டோம் என கூறியுள்ளனர். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். பரிசோதனை செய்ததில் எச்.ஐ.வி இல்லை என தெரியவந்தது . திருமணத்தில் விருப்பம் இல்லையென்றால் சொல்லியிருக்கலாம் என பெண் வீட்டார் கூறினர். நிச்சயதார்த்திற்கு 13 லட்சம் செலவு ஆனதாக பெண் வீட்டார் கூறினர். இதைத்தொடர்ந்து  கிரண்குமார் மீது மணமகள் குடும்பத்தினர் புகார் கொடுத்தனர்.மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்த போலீசார் கிரண்குமாரை சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை அதனால் தான் எச்.ஐ.வி இருப்பதாக கூறினேன் என போலீசாரிடம் கிரண் குமார் கூறினார். பின்னர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
Step2: Place in ads Display sections

unicc