நான் 15 வயதிலேயே ஆசிரியரை காதலித்தேன்! கங்கனாவின் காதல் கதை!

நடிகை கங்கனா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில்  நடித்ததன் மூலம் தமிழ்

By leena | Published: Oct 11, 2019 12:14 PM

நடிகை கங்கனா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில்  நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது முதல் காதல் அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், 'எனக்கு புரியாத வயதில் ஆசிரியர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த முதல் காதல் 15 வயதில் வந்தது. 17 வயதில் சண்டிகரில் இருந்தோம். எனது தோழி ஒரு பையனை விரும்பினார்கள். அவனுடைய நண்பனும் நானும் அவர்களுக்காக காத்திருந்தோம். அப்போது அந்த நண்பனை காதலிப்பதாக சொன்னேன். அவனோ என்னை பார்த்து நீ ரொம்ப சின்ன பொண்ணு என்று கூறினான். எனக்கு இதயமே வெடித்தது மாதிரி ஆகி விட்டது. சில நாட்கள் இருவரும் சுற்றி .விட்டோம். எனக்கு முத்தம் கொடுப்பது எப்படி என்பது கூட அப்போது சரியா தெரியவில்லை. அவனுக்கு முத்தம் கொடுக்க நினைத்து எனது உள்ளங்கையில் முத்தம்கொடுத்து பயிற்சி  எடுத்தேன். சிறிய வயது என்பதால் காதலில் சரியான புரிதல் இல்லாமல் இருந்தது. என கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc