எனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை! யாரையும் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் : நடிகை வரலட்சுமி

நடிகை வரலட்சுமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை ஆவார். இவர், எஸ்.முத்துக்குமரன்

By leena | Published: Aug 14, 2019 11:59 AM

நடிகை வரலட்சுமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை ஆவார். இவர், எஸ்.முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கன்னி ராசி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை வரலட்சுமி நடித்துள்ளார். இப்படத்தில், பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம், காதல் திருமணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு, சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகை வரலட்சுமி, பொதுவாகவே எனக்கு புது இயக்குனர்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், இப்படம் காதல் திருமணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நிஜவாழ்க்கையில் திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்றும், நான் யாரையும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc