என் யானைகள் அனாதையாக இருப்பதை விரும்பவில்லை! என்னுடைய முழு சொத்துக்களும் இவங்களுக்கு தான்!

என் யானைகள் அனாதையாக இருப்பதை விரும்பவில்லை! என்னுடைய முழு சொத்துக்களும் இவங்களுக்கு தான்!

என் மரணத்திற்குப் பிறகு என் யானைகள் அனாதையாக இருப்பதை நான் விரும்பவில்லை.

இன்று விலங்குகளுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வந்தாலும், இந்த விலங்குகளை மனிதர்கள் விட மேலாக நேசிப்பவர்களும் இதே உலகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பீகார் மாநிலம், பாட்னாவை சேர்ந்தவர் விலங்குகளின் காதலரான அக்தர் இமாம். இவர் மோதி மற்றும் ராணி என்ற இரண்டு யானைகளை வளர்த்து வருகிறார். 

இந்த இரண்டு யானைகள் மீதும், மனிதர்களுக்கு மேலாக அன்பு வைத்து வளர்த்து வரும் இவர், தனது முழு சொத்தையும் தனது இரண்டு யானைகளுக்கும் எழுதி வைத்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘விலங்குகள் மனிதர்களைப் போலல்லாமல் உண்மையுள்ளவை என்றும், எனது யானைகளின் பாதுகாப்பிற்காக நான் பல ஆண்டுகளாக உழைத்திருக்கிறேன்என்றும், என் மரணத்திற்குப் பிறகு என் யானைகள் அனாதையாக இருப்பதை நான் விரும்பவில்லை.’  என்றும் தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube