பள்ளிக்கு நாளை எப்படி வருவேன் என்று எனக்கே தெரியாது- மு.க.ஸ்டாலின்

பள்ளிக்கு நாளை எப்படி வருவேன் என்று எனக்கே தெரியாது- மு.க.ஸ்டாலின்

  • பள்ளி படித்த மாணவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களாக சந்தித்தார்.  
  • பள்ளிக்கு நாளை எப்படி வருவேன் என்று எனக்கே தெரியாது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   
சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி பள்ளியில் 1970-ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் 50 ஆண்டுக்கு பிறகு சந்திக்கும் நிகழ்வு தொடர்ந்து இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தன்னுடன் படித்த மாணவர்களை சந்தித்து பேசினார். அதேபோல்  நேற்றும் இரண்டாம் நாளாக சந்தித்தார். இதற்கு இடையில்  திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில் , நீண்ட நாட்களுக்கு பிறகு எனது நண்பர்களை சந்திப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு பள்ளித் தோழர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தது எனக்கு ஊக்கமும் மகிழ்ச்சி அளிக்கிறது. 50 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சக மாணவர்களை சந்திப்பது என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக அமைந்திருக்கிறது. அவர்களுடன் பழைய நினைவுகளை பரிமாறிக் கொண்டேன், அதுமட்டுமின்றி பள்ளி பருவத்தின் போது வெளியில் சென்றது, ஒன்றாக உட்கார்ந்து உணவு அருந்தியது , உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினோம் .இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தபோது நான் படித்த அறையையும் ஏழாம் வகுப்பில் நான் படித்த வரையில் சென்று பார்த்து இன்று அந்த வகுப்புகள் இரண்டும் குழந்தைகளுக்கான மழலையர் பள்ளி ஆக மாறி இருக்கிறது. பள்ளியில் ஒரு சில இடங்களில்தான் மாறி இருக்கிறேன். மற்றபடி நான் படித்த போது எப்படி இருந்ததோ அதே போன்று தான் தற்போதும் இருக்கிறது. நான் இந்த பள்ளிக்கு துணை முதல்வராகவும், சென்னை மேயராகவும், எம்.எல்.ஏவாகவும் பல முறை வந்திருக்கிறேன்.தற்போது எதிர்க்கட்சி தலைவராக வந்திருக்கிறேன், நாளை எப்படி வருவேன் என்று எனக்கே தெரியாது என்று கூறியுள்ளார்.

Latest Posts

குறைவான ஊதியத்தை எதிர்த்து நொய்டாவில் ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றார்..!
தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து.! அரசாணையை வெளியிட்டார் தலைமை செயலாளர்.!
இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீக்னஸ்....சஞ்சய் பங்கர்...!
விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக புகழேந்தி நியமனம் - துரைமுருகன் அறிவிப்பு
சிகிச்சை பெற்று பெண்ணிடம் தங்க தாலி திருட்டு - ஜிப்மர் மருத்துவமனை!
ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி சிறிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்-ரஷ்ய சுகாதார அமைச்சர்..!
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை
வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண் அடித்துக்கொலை...?
கோயம்பேட்டில் இன்று முதல் திறக்கப்படும் உணவு தானிய சந்தை!