எனக்கு தமிழ் தெரியாதா..? தமிழ் என் தாய்மொழி என ட்விட் செய்து பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்..!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் 1982-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மிதாலிராஜ்

By murugan | Published: Oct 16, 2019 11:58 AM

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் 1982-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மிதாலிராஜ் பிறந்தார். இவர் தந்தை துரைராஜ் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர். ஆனால் விமானப்படையில் வேலை செய்த துரைராஜ் பல இடங்களில் வேலை செய்யச் சென்றதால் செகந்திராபாத்தில் பணியாற்றினார். இதனால் அங்கேயே மிதாலிராஜ் தனது கல்லூரிப் படிப்பையும் , பள்ளிப் படிப்பை முடித்தார். இதைத்தொடர்ந்து 1999-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல் முறையாக மிதாலிராஜ் இந்திய அணிக்காக களம் இறங்கினார். முதல் போட்டியில் மிதாலிராஜ் 114 ரன்கள் குவித்தார். மிதாலி ராஜ் இந்திய அணிக்காக 10 டெஸ்ட் போட்டி , 206 ஒருநாள் போட்டி , 89 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும் 20 ஆண்டுகளாக சர்வதேச போட்டியில் விளையாடிய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். இந்நிலையில் மிதாலி ராஜிக்கு  தமிழ் தெரியாது எனவும் அவர் ஆங்கிலம் , தெலுங்கு மற்றும் இந்தி மட்டுமே நல்லா பேசுவார் என ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டு இருந்தார். அதற்கு பதிலளித்த மிதாலிராஜ்  "தமிழ் என் தாய்மொழி. நான் தமிழ் நன்றாக பேசுவேன். தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை" என தமிழில் ட்விட்  செய்து உள்ளார்.மேலும் ஒரு இந்தியன் என்ற பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.
Step2: Place in ads Display sections

unicc