தேவர் மகன் படத்திற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் : நடிகர் கமலஹாசன்

நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் பல

By Fahad | Published: Apr 08 2020 07:50 AM

நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் பல வெற்றி படங்களில் நடித்துளளார். தற்போது பிரமாண்டமாக நடைபெற்று முடிந்த, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில், தேவர் மகன் படத்தில் இடம் பெறும் போற்றி பாடடி பெண்ணே என்ற பாடல் சாதிய மோதல்களுக்கும், வன்முறைக்கும் வித்திட்டுள்ளதாக சில கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த கமலஹாசன், அந்த விபத்துக்கு நானும், இளையராஜாவும் வாலி அவர்களின் சார்பில் மன்னிப்பு கேட்கிறோம். எதையும் நினைக்காமல் செய்து விட்டோம்.' என கூறியுள்ளார்.