தளபதியின் இந்த வார்த்தை எனக்கு மிகவும் பிடிக்கும் : பிக்பாஸ் வின்னர் முகன்

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள

By leena | Published: Oct 11, 2019 07:40 AM

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய் அவர்கள் பேசியிருந்தார். அதுபோல சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் பேசியிருந்தார். இவரது பேச்சுக்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திழுக்கும் வகையில் இருக்கும். இந்நிலையில், தற்போது நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியின் வின்னரான முகனிடம், ஒரு பேட்டியின் போது, தளபதி விஜய் பேசியதில் உங்களை மிகவும் கவர்ந்த வசனம் எது என்று கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த முகன், 'கிரீடம் எவ்வளவு கனமாக வேணா இருக்கலாம். ஆனா, அதை தங்குற தலை கணமா இருக்க கூடாது.' என்ற வார்த்தை அவருக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc