மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் உள்ளேன்..! எம்.பி கணேச மூர்த்தி ..!

மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் உள்ளேன்..! எம்.பி கணேச மூர்த்தி ..!

தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம் .எல். ரவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். தேர்தலில் கூட்டணி கட்சிகளின் சின்னத்தில் தோழமைக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட தடை விதிக்க கோரி மனு கொடுத்திருந்தார். அந்த மனுவில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாரிவேந்தர் , ரவிக்குமார்மற்றும்  ஈரோடு கணேசமூர்த்தி ஆகிய எம்.பி-களின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கும் , திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற நான்கு எம்.பி களுக்கும் பதிலளிக்கும்படி உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதன்படி ஈரோடு எம்பி கணேசமூர்த்தி பதில் மனு தாக்கல் செய்திருந்தார். இதில் நான் மதிமுக உறுப்பினர் பதவியில் இருந்து விலகி  திமுகவில் சேர்ந்த பிறகுதான் ஈரோடு தொகுதி வேட்பாளராக  அறிவிக்கப்பட்டதாக கூறினார். மேலும் நான் தற்போது திமுக உறுப்பினராக தான் உள்ளேன். மக்களவையில் திமுக உறுப்பினராகவே சபாநாயகர் அங்கீகரிப்பதாக, திமுக கொறடா தான் தனக்கு பேசுவதற்கு நேரம் ஒதுக்குவதாகவும் அந்த மனுவில் கூறியிருந்தார்.

Latest Posts

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் கொடுத்தவர் இலங்கை நபர்..?
#IPL2020: கொல்கத்தாவை வீழ்த்தி 2-ம் இடத்திற்கு சென்ற பெங்களூர்..!
#IPL2020: மிரட்டலாக பந்து வீசிய பெங்களூர்.. 84 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா.!
சிம்பு நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா.?
"பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்க யாரும் நேரில் வர வேண்டாம்" - கே.எஸ்.அழகிரி!
இந்தியாவில் காற்று மாசுபாட்டால் 1.16  லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு - அமெரிக்க ஆய்வு
கமல்நாத்திற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!
பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி - மைசூரு சிறப்பு ரயில் இயக்கம்.!
ஆந்திராவில் 27 மாணவர்களுக்கு கொரோனா.. 4 பள்ளிகள் 10 நாட்களுக்கு மூடல்.!
மத்திய வங்கியில் கணக்கு துவங்குவதற்கான விண்ணப்பத்தை வேளாண் கூட்டுறவு வங்கியில் பெறலாம்.!