“நான் ஒரு விவசாயி”, தமிழகத்தில் அதிமுக ஆட்சியே தொடரும் – முதல்வர் பழனிசாமி

ராமநாதபுரம் மாவட்டத்தில் பேட்டியளித்த முதல்வர் தமிழகத்தில் அதிமுக ஆட்சியே தொடரும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ரூ.70.55 கோடி மதிப்பிலான 220 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள் சார்பாக ரூ.24 கோடி மதிப்பீட்டில் 844 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

இதனையடுத்து , செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் பழனிசாமி, கோட்டையில் பாஜக கொடி பறக்கும் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் கூறியதற்கு, கோட்டையில் தேசியக் கொடிதான் பறக்கும் என்று பழனிசாமி தெரிவித்ததோடு தமிழகத்தில் அதிமுக ஆட்சியே தொடரும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், நான் ஒரு விவசாயி, இது ஆனால் மு.க. ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டவர் மு.க.ஸ்டாலின் தான் அதை விவசாயிகள் என்றும் மறக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.