#BREAKING : 50% இட ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

#BREAKING : 50% இட ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

இந்த ஆண்டு 50 சதவீத ஓபிசி மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ,திமுக சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை இந்த வருடமே வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50 % இட ஒதுக்கீடு அல்லது 27% இட ஒதுக்கீடு என எதையும் இந்த ஆண்டு வழங்க முடியாது என்று மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் தகவல் தெரிவித்தது.இதனிடையே இன்று ,மருத்துவப் படிப்பில் ஒ.பி.சி மாணவர்களுக்கு, நடப்பாண்டில் 50% இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு 50 சதவீத ஓபிசி மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.மேலும் அவரது கடிதத்தில்,  ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே நடை முறைப்படுத்தப் படாதது ஏமாற்றம் அளிக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஆயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கல்வி கேள்விக்குள்ளாகும். 50% இட ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் -.தீர்வு காண வேண்டும்.அரசியல் மற்றும் கருத்தியல் வேறுபாடுகளைத் தாண்டி நாம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube