மும்பையில் நடைபெறும் போட்டிக்கு பாதுகாப்பு தர மறுப்பு - வேறு இடத்திற்கு மாற்றம்

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் 3 டி-20 போட்டிகள் மற்றும்

By venu | Published: Nov 27, 2019 06:47 PM

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் 3 டி-20 போட்டிகள் மற்றும் 3 50 ஓவர் போட்டிகள் நடைபெறுகிறது.இதற்காக மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இரு அணிகளும் முதலில் டி-20 போட்டியில் விளையாடுகிறது.முதல் டி-20 போட்டி  டிசம்பர் 6 -ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது பாதுகாப்பு காரணங்கள் கருதி போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.இதற்கு மும்பை காவல்துறையினர் தரப்பில்,மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.அதாவது போட்டி நடைபெறும் அன்று பாதுகாப்பு தர முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் டிசம்பர் 6 அன்று மும்பையில் நடைபெறவிருந்த இந்தியா- மேற்கு இந்திய தீவுகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி ஹைதராபாத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc