வருடாவருடம் வளர்ந்து கொண்டே இருக்கும் சூர்ய விநாயகர்! இந்த வருடம் எத்தனை அடி?

வரும் திங்கள் அன்று நாடு முழுவதும், ஆவனி மாதம் வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.  இந்த விழாவை கொண்டாட பக்தர்கள் தற்போதே ஆயத்தமாகி வருகின்றனர். பல்வேறு இடங்களில் இதற்கான பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் மும்பையில் விநாயகர் சதுர்த்தி வெகு கோலாகலமாக கொண்டாடப்படும். அங்கு லால்பாக்ஷா விநாயகர் மிகவும் பிரபலமானவர். அதேபோல ஹைதராபாத்தில் கைராபாத் விநாயகர் மிகவும் பிரபலமானவர். அங்கு செய்யப்படும் சிலை வருட வருடம் உயரம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்த வருடம் விநாயகர் சிலையின் உயரம் 61 அடியாகும். இந்த விநாயகர் சிலையை 12 தலைகள், 24 கைகள் உடன் ஏழு குதிரைகள் கொண்ட பிரமாண்டமாக தயாரித்துள்ளனர். இந்த விநாயகருக்கு சூரிய விநாயகர் என பெயரிட்டுள்ளனர். இச்சிலையை தயாரிக்க 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நான்கு மாதங்களாக ஈடுபட்டுள்ளனர். 50 டன் எடையுள்ள இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலை சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் விநாயகர் சதுர்த்தியன்று பொதுமக்கள் வழிபாட்டிற்கு கொண்டுவரவுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.