மனைவியை வைத்து சூதாடிய கணவன்! அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கணவனின் நண்பர்கள்!

Husband cheating on wife Friends of husband who sexually abused woman

உத்திர பிரதேச மாநிலத்தில், ஜான்பூர் மாவட்டத்தில் ஒரு பகுதியில் மதுவுக்கும், சூதாட்டத்திற்கும் அடிமையான கணவனால் ஒரு பெண்ணிற்கு வாழ்வில் பெரும்சோகம் நிகழ்ந்துள்ளது. அந்த நபர் தினமும் குடித்துவிட்டு தனது நண்பர்களுடன் சூதாடுவது வழக்கம். அன்றைய தினமும் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு சூதாடியுள்ளார். அப்போது போதை தலைக்கேறி அவரது மனைவியை வைத்தே சூதாடி உள்ளார். இதில் தோற்றதால், அவனது நண்பர்கள், அந்த போதை ஆசாமியின் அனுமதியுடன் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.  இதனால் பயந்து போய் தனது பெற்றோர் வீட்டில் சென்று தங்கியுள்ளார் அந்த பெண். சில நாட்கள் கழித்து, அந்த நபர், மனைவி வீட்டிற்கு வந்து, அவரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ அழைத்துள்ளார். இதனால் மீண்டும் கணவனுடன் சேர்ந்து வாழ நினைத்து  அந்த பெண் அவனுடன் காரில் ஊருக்கு போய் கண்டிருந்தார். செல்லும் வழியில் தனது நண்பர்களுக்கு போன் செய்தான்.  வழியில் காரில் ஏறிய அவனது நண்பர்கள் காரில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அங்கிருந்து தப்பித்த அந்த பெண், போலீசில் புகார் அளித்தார். ஆனால் முதலில் புகாரை காவல்துறையினர் எடுத்துக்கொள்ளவில்லை என தெரிகிறது. பின்னர், நீதிமன்றத்தில் புகார் அளித்த பிறகு, அந்த பெண்ணின் கணவர் மீதும், அந்த நண்பர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.