மனைவியிடம் பேசிய நபரை அடித்து கொன்ற கணவன்..!

அரியலூர் மாவட்டத்திலுள்ள மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. அதே பகுதியை

By murugan | Published: Jan 14, 2020 04:46 PM

  • அரியலூர் மாவட்டத்திலுள்ள மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. அதே பகுதியை சார்ந்த கொளஞ்சி என்பவரின் மனைவியுடன் ரவி பேசிக் கொண்டிருந்தார்.
  • அப்போது  கொளஞ்சிக்கும் , ரவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறி கொளஞ்சி குடும்பத்தினர் ரவியை தாக்கியதாக கூறப்படுகிறது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் அதே பகுதியில் உள்ள கொளஞ்சி என்பவரின் மனைவியுடன் ரவி பேசிக் கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த கொளஞ்சிக்கும் , ரவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி கொளஞ்சி குடும்பத்தினர் ரவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ரவியை முதலுதவி சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்குரவிக்கு முதலுதவி கொடுக்கப்பட்டு மேல்  சிகிச்சைக்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் ரவி தஞ்சாவூர் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரவி உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும்அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc