முத்தம் கொடுப்பதாக கூறி மனைவியின் நாக்கை வெட்டிய கணவன்..!

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் வேஜல்பூர் பகுதியை சார்ந்தவர் நர்ஸ் 

By murugan | Published: Oct 14, 2019 09:30 AM

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் வேஜல்பூர் பகுதியை சார்ந்தவர் நர்ஸ்  தஸ்லிமா. இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவர் 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு கடந்த ஆண்டு அன்சாரி  என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அன்சாரி ஏற்கனவே 2 திருமணம் ஆகி மனைவி விவாகரத்து செய்து விட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அன்சாரி இரண்டாவது மனைவியுடன் குடும்பம் நடத்தி வருவதாக தஸ்லிமாக்கு சந்தேகம் வந்தது.இது தொடர்ந்து அன்சாரியை தஸ்லிமா கவனிக்கத் தொடங்கினார். ஆனால் அன்சாரி வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. வேலை இல்லாமல் இருக்கும் அன்சாரி நேற்று முன்தினம் தஸ்லிமாவிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. உடனே அன்று இரவு தஸ்லிமாவின் நாக்கில் முத்தம் தருவதாக அன்சாரி கூறியுள்ளார். சரி  சமாதானமாக போகலாம் என நினைத்து தஸ்லிமா தனது நாக்கை நீட்டி உள்ளார். அப்போது  அன்சாரி அருகில் வந்து நாக்கில் முத்தம் கொடுத்துவிட்டு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தஸ்லிமாவின் நாக்கை வெட்டிவிட்டார். இதில் துண்டாகி விட்டது  இதைத்தொடர்ந்து அன்சாரி வீட்டின்  பூட்டி விட்டு ஓடிவிட்டார். பின்னர் தஸ்லிமா வீடியோ கால் மூலமாக தங்கைக்கு தகவல் கொடுத்தார். பின்னர் விரைந்து வந்து வீட்டின் கதவை திறந்து தஸ்லிமாவை மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து நாக்கை ஒட்டி உள்ளனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Step2: Place in ads Display sections

unicc