பேருந்து நடத்துனரை ஆயுதப்படை காவலர்கள் அடித்த விவகாரம்! மனித உரிமை ஆணையம் மாவட்ட எஸ்.பிக்கு நோட்டீஸ்!

திருநெல்வேலியில் இருந்து நாகர்கோயில் சென்ற அரசு பேருந்தில் கூடங்குளம் வரை செல்ல ஆயுதப்படை காவலர்கள் மகேஷ் மற்றும் தமிழரசன் ஆகியோர் பயணம் செய்தனர். அப்போது அப்பேருந்து நடத்துனர் ரமேஷ்நர் என்பவருக்கும் ஆயுதப்படை காவர்களுக்கும் இடையே பயணசீட்டு விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆயுதப்படைகாவலர்கள் நடத்துனரை தாக்கியதில் அவருக்கு ரத்தம் வந்தது. இதனால், ஆயுதப்படை காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தற்போது ஆயுதப்படை காவலர்கள் நடத்துனரை தாக்கியது தொடர்பாக மாவட்ட எஸ்.பி பதிலளிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மனித உரிமை ஆணையம் அலுவலகத்தில் மாவட்ட எஸ்.பி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.