காவலரை காஞ்சிபுரம் கலெக்டர் ஒருமையில் திட்டிய விவகாரம்! தானாக முன்வந்து விசாரிக்கும் மனித உரிமை ஆணையம்!

சில நாட்களுக்கு முன்னர் காஞ்சிபுரம் அத்திவரதர் ஆலயத்தில் பொதுமக்கள் சிலரை

By Fahad | Published: Mar 28 2020 11:20 AM

சில நாட்களுக்கு முன்னர் காஞ்சிபுரம் அத்திவரதர் ஆலயத்தில் பொதுமக்கள் சிலரை கூட்ட நெரிசல் காரணமாக விஐபி  தரிசன வரிசையில் செல்ல அனுமதித்தாக கூறி  காஞ்சிபுரம் காவல் ஆய்வாளரை ஒருமையில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திட்டினார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி பேசுபொருளாகவும், செய்தியாகவும் மாறியது. இந்த செய்திகளை பார்த்துவிட்டு, மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என தலைமை செயலாளர், டிஜிபி  ஆகியோரிடம் இன்னும் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.