#IPL2020: விக்கெட்டுகளை கொடுக்காமல் வெற்றி பெற்ற மும்பை..!

இன்று நடைபெறும் 41-வது போட்டியில் மும்பை – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் ,டு பிளெசிஸ் இருவரும் இறங்கினர். ஆனால், ஆட்டம் தொடக்கத்திலே ருதுராஜ் ரன் எடுக்காமல் வெளியேற பின்னர், இறங்கிய அம்பதி ராயுடு 2 ரன் மட்டும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதைத்தொடர்ந்து, இறங்கிய முதல் பந்திலே ஜெகதீசன் வெளியேறினார். பின்னர், டு பிளெசிஸ் 1 ரன் எடுத்து வெளியேற அடுத்த தோனி – ஜடேஜா கூட்டணி இணைந்தது. இருவரும் நிதானமாக ஆடி வந்தனர்.

பின் ஜடேஜா 7, தோனி 16 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க,  மத்தியில் இறங்கிய சாம் கரண் நிதானமாக விளையாடி 52 ரன்கள் குவித்தார். இறுதியாக சென்னை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 114 ரன்களை மட்டுமே எடுத்தனர்.

115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக், இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் அரைசதம் விளாசினார்.

இறுதியாக மும்பை  அணி 12.2 ஓவரில் விக்கெட்டை இலக்காமல்  116 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். கடைசிவரை களத்தில் குயின்டன் டி காக் 68*, இஷான் கிஷன் 46* ரன்களுடன் நின்றனர்.

author avatar
murugan