7.5% இட ஒதுக்கீடு : இறுதியில் வென்ற சமூகநீதி! எப்போதும் வெல்லும்! – மு.க.ஸ்டாலின்

7.5% இட ஒதுக்கீடு : இறுதியில் வென்ற சமூகநீதி! எப்போதும் வெல்லும்! – மு.க.ஸ்டாலின்

7.5% இட ஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநருக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் ட்வீட்.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என, தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், ஆளுநர் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதித்து வந்த நிலையில், தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அடிப்படையாக கொண்டு, மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கான அரசணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, ஆளுநர் பன்வாரிலாலும், இந்த அரசாணைக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதுக்குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில், ’45 நாட்கள் கழித்து, கலந்தஆய்வுக்கான காலம் நெருங்குகையில், வேறு வழியின்றி, 7.5% இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி. திமுக-வின் போராட்டமும் நீதியரசர்கள் வைத்த மனச்சாட்சி வேண்டுகோள்களும் ஆளுநரின் மனமாற்றத்துக்கு காரணம். இறுதியில் வென்ற சமூகநீதி, எப்போதும் வெல்லும்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube