குழந்தைகளை குளிர் காலத்தில் தாக்கும் நோய்களின் பாதிப்பில் இருந்து எவ்வாறு பாதுகாக்கலாம்

குளிர்காலத்தில் குழந்தைகள் பல நோய்களால் பாதிக்கபடுகிறார்கள். குறிப்பாக அவர்களை தாக்கும் முக்கிய நோயாக விளங்குவது சளி,இருமல் ஏற்படுத்தும் வைரஸ்கள் குளிர்காலத்தில் மிக விரைவில் குழந்தைகளை தாக்கும்.

குளிர்காலங்களில் குழந்தைகளுக்கு நோய் ஏற்பட காரணங்கள்:

குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு தொண்டை வலியால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். சில பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி குழந்தைகளை  சாப்பிட வைப்பார்கள். இது மிகவும் தவறு. இதனால் தொண்டையில் இருக்கும் வைரஸ் தொற்று காதுக்கும் பரவி பல பாதிப்புகளுக்கு வழி வகுத்து விடும்.

மழை  மற்றும் குளிர்காலங்களில்  குழந்தைகள் வைரஸ் தாக்குதலுக்கும் ஆளாகிறார்கள். ஆரம்ப நிலைகளில் அறிகுறிகளாக கை ,கால்களில்  தடிப்புகள் தோன்றி பின்னர் இருமல்,தும்மல்,காய்ச்சல் வரும். இதற்கு தடுப்பூசி எதுவும் கிடையாது.

 

நோய் தொற்றுப்பரவாமல் தடுக்க:

 

வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்படைந்த குழந்தைகளை சுத்தமாக வைத்துக்கொண்டாலே இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பித்து விடலாம். இருமும் போதும் தும்மும் போதும் அடுத்தவர்களுக்கு நோய் தொற்றாமல் இருக்க கைக்குட்டையை மூக்கில் வைத்து மறைத்து தும்முவது மிகவும் நல்லது.

வெளியில் சென்று வந்தால் கை கால்களை கழுவும் பழக்கம்:

 

குழந்தைகளை விளையாடிய பிறகும், வெளி இடங்களுக்கு சென்று வீடுதிரும்பிய பிறகும் சுத்தமாக காய்,கால்களை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு நாம் குழந்தைகளுக்கு கற்று கொடுப்பதால் அவர்கள் எப்போதும் அவர்களை சுத்தமாக வைத்து கொள்வார்கள்.இதனால் குழந்தைகளுக்கு எந்த விதமான நோய் தொற்றுகளும் ஏற்படாது.

வைட்டமின் சி :

குழந்தைகளை தாக்கும் வைரஸ் தொல்லைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க வைட்டமின்சி மிகுந்த உணவுகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். அவர்களுக்கு தயிர் ,மோர் குளிர்காலங்களில் உணவாக கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. இவை இரண்டிலும் உள்ள நோய்எதிர்ப்பு சக்திகளை  அதிக படுத்தும் ப்ரோபயோடிக்ஸ் உள்ளது.

குளிர்ந்த உணவுகள்:

 

குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுப் பொருட்களை நேரடியாக எடுத்து சாப்பிடக் கூடாது. அதை சூடு செய்தோ அல்லது தட்ப வெட்பத்துக்கு அவை வந்ததும் சாப்பிட வேண்டும்.

சத்தான உணவுகள் :

 

குளிர்காலத்தில் குழந்தைகளை நோய் தாக்காமல் இருக்க அவர்கள் உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். காய்கறிகள், ஒமேகா 3 நிறைந்த மீன்கள், சிறுதானியங்கள், பாதாம், வேர்கடலை, தேன், போன்றவற்றை  உணவில் சேர்த்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

தண்ணீர் :

 

குளிர்காலங்களில் குழந்தைகள்  தண்ணீர் பருகுவது மிகவும் குறைவாக இருக்கும். குழந்தைகள் குளிர்காலங்களிலும் அதிகஅளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக குழந்தைகளுக்கு  குடிக்க கொதிக்க வைத்து ஆறிய நீரை  கொடுப்பது மிகவும் நல்லது.

சரும வறட்சி :

குளிர் காலங்களில் குழந்தைகளுக்கு சரும வறட்சி ஏற்படும்.அதனை தடுக்க குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய்யை  கொண்டு வறட்சி இருக்கும் இடங்களில் பூசுவர வறட்சி தடைபடும்.

 

Leave a Comment