உடலுக்கு ஆரோக்கியம் தரும் பனானா சர்பத் செய்வது எப்படி ?

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பனானா சர்பத் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள் :

  • நன்கு பழுத்த வாழை பழம் -4
  • சர்க்கரை – 2 ஸ்பூன்
  • ஐஸ்கட்டி -5
  • சர்பத் -தேவையான அளவு

செய்முறை :

முதலில் மிக்சி ஜாரில் 4 வாழைப்பழத்தையும் போட்டு நன்கு அடித்து எடுத்து வைத்து கொள்ளவும். அதில் ஐஸ்கட்டி மற்றும் சர்பத் ,சர்க்கரை சேர்த்து ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும். இப்போது ஹெல்தியான பனானா ஜூஸ் ரெடி.