அசத்தலான உருளைக்கிழங்கு ப்ரை செய்வது எப்படி?

நமது வீடுகளில் சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை அனைவருமே கிழங்கு வகைகளை

By leena | Published: Feb 15, 2020 01:00 PM

நமது வீடுகளில் சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை அனைவருமே கிழங்கு வகைகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில் நாம் உருளைக்கிழங்கை வைத்து விதவிதமாக உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தத்தாலான உருளைக்கிழங்கு ப்ரை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை
  • உருளைக்கிழங்கு - 350 கிராம்
  • சிக்கன்65 பொடி - ஒரு தேக்கரண்டி
  • கடுகு - அரைத் தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
  • உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விட வேண்டும். அது வேகும் வரை வதக்கிக் கொண்டே இருக்க வேண்டும். பின் சிக்கன் 65 போடி சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இப்போது, சுவையான உருளைக்கிழங்கு ப்ரை தயார்.
Step2: Place in ads Display sections

unicc