சத்தான சேமியா கொழுக்கட்டை செய்வது எப்படி?

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொழுக்கட்டையை விரும்பி

By leena | Published: Aug 30, 2019 11:10 AM

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொழுக்கட்டையை விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த கொழுக்கட்டையை பல வகைகள் உள்ளது. நமது வீடுகளில் விழாக்காலங்களில் செய்கின்ற பலகாரங்களில் கொழுக்கட்டையும் ஒன்று. தற்போது இந்த பதிவில் சுவையான சேமியா கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

 • சேமியா - 200 கிராம்
 • தேங்காய் - ஒன்று (துருவிக் கொள்ளவும்)
 • காய்ச்சிய பால் - 2 கப்
 • அரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன்
 • நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்
 • பச்சை மிளகாய் - 5 (நறுக்கியது)
 • கடுகு, சீரகம், எள் - தலா அரை டீஸ்பூன்
 • உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 • கறிவேப்பிலை - சிறிதளவு
 • எண்ணெய் - தேவையான அளவு
 • உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் சேமியாவை வருது, 30 நிமிடம் பாலில் ஊற வைக்க வேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்க வேண்டும். அதன் பின் தேங்காய் துருவல் சேர்த்து, தீயை நிறுத்திவிட்டு கலக்க வேண்டும். பாலில் ஊறிய சேமியா, உப்பு, அரிசி மாவு, எள்ளு, சீரகம் ஆகியவற்றை அதில் கலக்க வேண்டும். பின் கையினால் நன்கு மசித்து கலந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான சேமியா கொழுக்கட்டை தயார்.
Step2: Place in ads Display sections

unicc