அட்டகாசமான இட்லி மாவு போண்டா செய்வது எப்படி?

நாம் இட்லி மாவில் இட்லியை தவிரா தோசை மட்டும் தான் போடுவோம். ஆனால் அந்த இட்லி மாவில் எப்படி போண்டா போடுவது அதற்கான உபகரணங்கள் யாவை என்பதை இன்று பார்க்கலாம். 

தேவையான பொருள்கள் 

  • இட்லிமாவு 
  • கடலைப்பருப்பு 
  • அரிசி மாவு 
  • பெரிய வெங்காயம் 
  • இஞ்சி 
  • பச்சை மிளகாய் 
  • மிளகாய் தூள் 
  • கடலை மாவு 
  • தேங்காய் துருவல் 
  • கறிவேப்பில்லை 
  • உப்பு 

செய்முறை 

வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில், இட்லி மாவுடன், கடலை மாவு, கடலை பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்ந்து நன்றாக கலக்கவும். 

கலக்கிய மாவை கடாயில் கொதிக்கும் எண்ணெயில் போடவும், மொறு மொறுப்பாக சாப்பிட விரும்புபவர்கள் அந்த மாவை சற்று அரிசி மாவில் தோய்த்துவிட்டு பொரிக்கவும். மிகவும் சுவையான இட்லி போண்டா தயார். 

author avatar
Rebekal