சுவையான காய்கறி சேமியா செய்வது எப்படி?

சுவையான காய்கறி சேமியா செய்வது எப்படி?

சேமியா வைத்து நாம் சாதாரணமாக வடித்து ஏதாவது ஒரு குழம்புடன், சீனியுடன் அல்லது காபியுடன் சாப்பிடுவது தான் தெரிந்திருக்கும். ஆனால் அதே சேமியாவை அட்டகாசமாக சுவையான முறையில் செய்வது எப்படி தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • வறுத்த சேமியா
  • கேரட்
  • பீன்ஸ்
  • பட்டாணி
  • வெங்காயம்
  • மிளகாய்
  • தக்காளி
  • கருவேப்பிலை
  • கடுகு
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை 

முதலில் சேமியாவை கொதிக்கும் நீரில் போட்டு பதமாக வடித்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு அதனுடன் நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ், தக்காளி, பட்டாணி ஆகிய காய்கறிகளை சேர்க்கவும். காய்கறி வதங்குவதற்காக சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

அதனுடன் வீட்டில் நாம் உபயோகப்படுத்தும் மிளகாய்ப் பொடியை சேர்த்து சிறிதளவு நீர் ஊற்றி காய்கறி நன்றாக வதங்கும் வரை வற்ற விடவும். அதன் பின்பு, அனைத்தும் நன்றாக வதங்கிய பின் லேசான நீருள்ள பதத்தில் இறக்கி வடித்து வைத்துள்ள சேமியாவை போட்டு கிளறினால் சுவையான காய்கறி சேமியா தயார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube