சுவையான புடலங்காய் குழம்பு செய்வது எப்படி?

நாம் நமது வீடுகளில் பல வகையான காய்கறி பயன்படுத்தி, விதவிதமான உணவுகளை செய்து

By leena | Published: Apr 06, 2020 01:02 PM

நாம் நமது வீடுகளில் பல வகையான காய்கறி பயன்படுத்தி, விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான புடலங்காயாய் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

 • புடலங்காய் - 1 
 • வெங்காயம் -2
 • பச்சை மிளகாய் - 3
 • பூண்டு - 4 பல் 
 • தக்காளி பழம் -1
 • புளி  - ஒரு எலுமிச்சை அளவு  
 • பால் - 1 கப் 
 • மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி 
 • உப்பு - தேவையான அளவு 
 • எண்ணெய் - தேவையான அளவு 
 • கடுகு - அரை தேக்கரண்டி 
 • பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி 
 • கறிவேப்பிலை - ஒரு நெட்டு 

செய்முறை 

புடலங்காயை பொடியாக நறுக்கவும். வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, பூண்டை  நறுக்கி வைக்க வேண்டும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் புடலங்காயை போட்டு பொன்னிறமாக  பொறிக்க வேண்டும். புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்து கொள்ளவேண்டும்.ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய்  ஊற்றி தாளிக்க வேண்டும்.அதில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், பெருஞ்சீரகம், கறிவேப்பிலை, பூண்டு, சேர்த்து வதக்க வேண்டும்.

பின் புளிக்கரைசல்  மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். மிளகாய் தோலின் பச்சை வாசனை போனதும் பாலை ஊற்ற வேண்டும். பாலை சேர்த்ததும் ஒரு கொதி வந்ததும் பொரித்து வைத்திருக்கும் புடலங்காயை போட வேண்டும். குழம்பு கெட்டியானதும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.சுவையான புடலங்காய் குழம்பு ரெடி.  

Step2: Place in ads Display sections

unicc