சுவையான பாகற்காய் பொரியல் செய்வது எப்படி?

சுவையான பாகற்காய் பொரியல் செய்வது எப்படி?

நம்மில்  அதிகமானோர் பாகற்காயை விரும்பி சாப்பிடுவதில்லை. இது கசப்பு தன்மையுடன் காணப்படுவதால் தான் இதை விரும்பி சாப்பிடுவதில்லை. தற்போது இந்த பதிவில் சுவையான பாகற்காய் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். 

தேவையானவை 

  • பாகற்காய் – 1 
  • கான்பிளார் மாவு – 3 டீஸ்பூன் 
  • உப்பு – சிறிதளவு 
  • மீன் பொரிக்கும் தூள் – சிறிதளவு 

செய்முறை 

முதலில் பாகற்காயை மெலிதாக, வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதனை சிறிது நேரம், தண்ணீரில் உப்பு கரைத்து அந்த கரைசலில் போட்டு வைக்க வேண்டும். 

பின் அதனை எடுத்து, கான்பிளார் மாவு, மீன் பொரிக்கும் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி, தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்த்து, சிறிது நேரம் ஊற விட வேண்டும். 

பின் வாணலியில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதனுள் இந்த பாகற்காயை போட்டு, பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான பாகற்காய்  பொரியல் தயார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube